Categories
மாநில செய்திகள்

அடுத்த சில மணி நேரத்தில்…. டமால் டுமீல் சத்தத்தோடு…. 22 மாவட்டங்களில்…. மக்களே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில மாவட்டங்கலில் சற்று மழை குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த சில மணி நேரம் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |