நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். என்னதான் அப்படி இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் படம் என்னவோ செம ஹிட்டு…!! இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். ஊ சொல்றியா என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது.
இந்த பாடலுக்காகவே சிலர் திரும்பத் திரும்ப சென்று தியேட்டர்களில் இந்த படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை சமந்தாவின் டான்ஸ் செம டிமாண்ட் ஆகியுள்ளது. எங்க படத்துக்கு வாங்க எங்க படத்துல வந்து ஒரு குத்தாட்டம் போடுங்க என இயக்குனர்கள் பலர் இவரது வீட்டின் வாசலில் வரிசைகட்டி நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் தேவகொண்டா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ‘லிகர்’ என்ற படத்தில் சமந்தாவை ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்துள்ளனராம். இந்த பாடலும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல் போலவே உருவாக இருக்கிறது என படக்குழுவினர் கூறுகின்றனர்.