ரஷிய நாட்டு வங்கிகளை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து விளக்குவதற்கு முக்கிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
ரஷ்யா உக்ரைன் மீது தேவையின்றி போர் தொடுத்தற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் ரஷ்யா திணறுகிற நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் அமெரிக்கா மீது நேரடியாக பாய்ந்து பொருளாதார தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள புதனின் சொத்துக்கள் முடங்கியுள்ளது. மேலும் அமெரிக்கா புதினுக்கு ஆதரவளிக்கும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மீதும் பொருளாதார தடை விதித்திருக்கிறது.
இந்த நிலையில் ரஷ்ய நாட்டு வங்கிகளை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து விளக்குவதற்கு முக்கிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான புதிய நிதி தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறியதாவது “ரஷ்யாவின் இந்த வங்கிகள் சர்வதேச நிதி அமைப்பிலிருந்து துண்டிக்க படுவதையும் உலக அளவில் செயல்படும் அவை தனக்கு தீங்கு விளைவிப்பதையும் இது உறுதி செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி ரஷ்ய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வங்கிகளுடன் தங்கள் வங்கிகள் பாதுகாப்பு தொடர்பு கொள்ள முடியாது என்பது இதன் அர்த்தமாகும். இதனைத் தொடர்ந்து 2014 ஈரானை உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான நீதி தொலைக்காட்சியில் சமூகத்தில் (SWIFT) இருந்து தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தின் வளர்ச்சி தொடர்பாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன நிறுவனம் தான் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் (SWIFT) என்பதாகும். இந்நிலையில் இந்த நிதி நிறுவனங்கள், 200 க்கும் மேற்பட்ட நாடுகள், பிராந்தியங்களில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட வங்கிகள் இவைகளுக்கு இடையிலான செய்தியிடல் அமைப்பாக செயல்படுகிறது.