அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தால் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 என்னும் ராக்கெட்டின் 4 டன் எடையுடைய பூஸ்டர் என்று அழைக்கப்படும் மேல் பகுதி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நிலவில் மோதவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 என்ற ராக்கெட்டின் மூலம் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது.
இந்த ராக்கெட் செயற்கை கோளை விண்ணில் நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பாமல் சில காரணங்களால் அங்கேயே தாறுமாறாக சுற்றி வருகிறது.
இந்நிலையில் அந்த பால்கன் 9 ராக்கெட்டின் 4 டன் எடையுடைய பூஸ்டர் என்னும் மேல் பகுதி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நிலவின் பின்புறத்தில் மோதவிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.