Categories
உலக செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடுகள்… ஐரோப்பிய அதிகாரிகள் அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் பிரித்தானிய பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி ஒன்று விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரித்தானியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 7 யூரோ அதாவது 6 பவுண்டுகள் வரி விதிக்கப்பட உள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது Schengen எல்லைக்குள் நுழையும் பிரித்தானியா உள்ளிட்ட 62 ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவோர் குறித்த தகவல் மற்றும் அவர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களா உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்ட பிறகே ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகாரம் அமைப்பு ( ETIAS ) ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதி வழங்கும்.

இந்தத் திட்டம் அமெரிக்காவிலும் உள்ளது. இந்த திட்டத்தின்படி 39 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா விசா இன்றி 90 நாட்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால் ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பயணிகளை மூன்று ஆண்டுகளுக்கு அனுமதிப்பதோடு, பலமுறை அனுமதிப்பதற்கான திட்டத்தினை 2022-ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |