Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. 10 வயது சிறுமியை கதற கதற…. நாட்டையே உலுக்கும் பயங்கர சம்பவம்…..!!!!

மத்திய மாநில பிரதேசம் செகூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 15ம் தேதி மாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளி பக்கம் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி தன்னைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்பதற்காக அவரை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பி சென்றுள்ளார். அதன்பின் கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றில் இருந்து கம்பியைப் பிடித்து மேலேறி உயிர் தப்பியுள்ளார்.

இதனைதொடர்ந்து சிறுமி வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை நேற்று கைது செய்தனர். மேலும் அந்த நபர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தை வன்கொடுமை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |