Categories
உலக செய்திகள்

அடுத்து கிளம்பிருச்சு…. ஒமிக்ரானை தொடர்ந்து புதிய வகை வைரஸ்…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து டெல்டா எனும் புதிய வகை வைரஸ் உருவாகி அதுவும் புதிய வகை பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய அவதாரமான கொரோனா, ஒமிக்ரானை தொடர்ந்து தற்போது உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய மாறுபாடு குறித்து இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது ஒமிக்ரான்  வைரஸிலிருந்து உருவானதாக தெரிகிறது. ஒமிக்ரானின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் விரைவில் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |