Categories
சினிமா

‘அடுத்தவன மிதிச்சு முன்னேறனும் நினைக்காதீங்க’….. வாழு வாழ விடு…ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட நடிகர்…!!!

நடிகர் ஜான் கோக்கேன், அஜித்தின் வலிமை படத்தை தரம் தாழ்த்தி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த 24 ஆம் தேதி வெளியான ‘வலிமை’  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தை குறித்து இயக்குனரும், திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் என்பவர் கடுமையாக விமர்சித்து உள்ளார். நடிகர் அஜித், இப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனம் ஆடியது, பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் இருக்கிறது என்று கேவலமாக கூறியிருந்தார். இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றிய நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கோக்கின் என்பவர், ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் ஒரு சாதாரண நடிகன், ஆனால் நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர். எனக்கு நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து, உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. சினிமா என்றாலே விமர்சனமும் சேர்ந்துதான். அந்த வகையில் அந்த சினிமாவை வளர்ப்பது, விமர்சனமே. இதனாலேயே சினிமா விமர்சகர் மதிக்கப்படுகிறான் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு பிறரை மரியாதையாக பேசுவதும் அவசியம்.

மேலும் சினிமாவில் பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் சூப்பர் ஸ்டார்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த இடங்களை பிடிப்பதற்கு எவ்வளவு போராடி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனவே அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும்போது கொஞ்சம் நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதே என் கோரிக்கை. மேலும் தொழில்நுட்பங்களை முன் நிறுத்தி விமர்சனம் செய்யுங்கள் என்றும் தமிழ் சினிமாவை புரிந்து விமர்சனம் செய்யுங்கள் என்று கூறினார்.

ஆனால் தயவு செய்து யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை நிறுத்தி மரியாதையுடன் விமர்சனம் செய்யுங்கள். இதையடுத்து தமிழில் பல லட்சம் நல்ல சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு நல்ல மரியாதையுடனான சொற்களால் நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள். மேலும் பிறரை உங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் வெற்றியை தரும் படியான விமர்சனத்தை மேற்கொள்ளுங்கள்.

மேலும் சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகனாக எனது கோரிக்கையை கூறியுள்ளேன். இதை நீங்கள் புரிந்து நடப்பீர்கள் என்றும் நம்புகிறேன். மேலும் அஜித் சாரின் பெரிய ரசிகனான நான், இறுதியாக அவர் ஸ்டைலிலேயே”நீங்க என்ன வேணா பண்ணுங்க.. உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க.. ஆனா அடுத்தவன மிதிச்சு முன்னேறனும் நினைக்காதீங்க.. வாழு வாழ விடு” என்று கடிதம் மூலம் ஜான் கோக்கேன், ப்ளூ சட்டை மாறனின் தரம் தாழ்ந்த விமர்சனத்தை கிழித்து தொங்க விட்டு உள்ளார்.

Categories

Tech |