பிரபல சீரியலில் இருந்து வில்லி நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடியது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானதால் ராஜா ராணி 2 சீரியலையும் விஜய் டிவி ஒளிபரப்பியது. இந்த சீரியலில் சித்தார்த் மற்றும் ஆலியா மானசா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த சீரியலில் இருந்து ஆலியா மானசா கர்ப்பம் காரணமாக விலகியதால், ரியா விஸ்வநாதன் தற்போது சந்தியா ரோரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் கதை திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவர் உதவியுடன் எப்படி ஐபிஎஸ் கனவை நிறைவேற்றுகிறார் என்பதுதான். இந்நிலையில் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய வில்லத்தனத்திற்காகவே பலர் ராஜா ராணி சீரியலை பார்த்து வரும் நிலையில், விஜே அர்ச்சனா விளக்குகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அர்ச்சனாவிற்கு பதில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து புகழ்பெற்ற அர்ச்சனா குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.