சென்னை பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 வாகனங்கள் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.