முழு ஊரடங்கை பயன்படுத்தி அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பஞ்சர் கடை, வெல்டிங் கடை, டீக்கடை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் கடை என தொடர்ந்து 4 கடைகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அதோடு கடையில் திருடிய ஒயரை அந்த இடத்திலேயே தீ வைத்து எரித்து விட்டு போயுள்ளனர் .
காவல் துறையினரிடம் இருந்து தப்பித்துக்கொள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் திருடி உள்ளனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஊரடங்கு என்பதால் கடைகள் அனைத்தும் பூட்டியிருக்க அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தொடர்ந்து நான்கு கடைகளில் திருடி உள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.