Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து ஷாக்…! 11 நாடுகளில் குரங்கு வைரஸ்…. WHO வெளியிட்ட தகவல்…!!!!

11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு,தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கோடை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவது, திருவிழாக்கள், விருந்துகள் என ஐரோப்பிய நாடுகளில் நோயின் பரவல் அதிகரிக்க கூடும் என ஐ.நா.வுக்கான ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குளூஜ் கூறுகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல் போன்ற பிற சுகாதார விசயங்களை கடைப்பிடிப்பதும், இந்த வியாதி பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என குளூஜ் கூறியுள்ளார்.

Categories

Tech |