தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயதுள்ள ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஆனைமலையில் இருந்து கொண்டுவரப்பட்டு 13 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளது. இதனிடையில் ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா உறுதியானதால் பூங்கா ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.