அரசியல் அறிவிப்பை உறுதி செய்த பின்பு போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் கொடுத்த வாக்கிலிருந்து என்னைக்கும் தவற மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவை. ரொம்ப முக்கியம். ஒரு அரசியல் மாற்றம் நடந்தே ஆகணும். இப்போ இல்லன்னா அது எப்பவுமே கிடையாது. எல்லாத்தையும் மாற்றனும்.
நான் ஒரு சின்ன கருவிதான். ஜனங்க நீங்க தான் முடிவு பண்ணனும். நான் அரசியல் மாற்றத்திற்கு வந்துட்டேன். இந்த மாற்றம் நடக்கட்டும். நான் வந்த பிறகு வெற்றி அடைந்தாலும் அது மக்களுடைய வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி. அந்த மாற்றத்துக்கு நீங்க எல்லோருமே என்கூட நிக்கணும்.
எனக்கு 40% அண்ணாத்தை பட படப்பிடிப்பு இருக்கின்றது. அதை முடிக்க வேண்டியது என்னுடைய கடமை. அதை முடித்துக் கொடுத்து விட வேண்டும். எனக்கென்று கடமை உணர்வு இருக்கு. அதை முடிக்கணும். அதை முடித்துவிட்டு வருவதற்குள் இந்த கட்சியை டிசம்பர் 31 ஆரம்பிக்கப் போகிறேன் என சொல்லிவிட்டேன். கட்சி வேலை நிறையா இருக்கு. இது ராட்சச வேலை.
எல்லாத்தையும் செய்யணும். அந்த வேலையெல்லாம் நாங்க தொடங்கிவிட்டோம். இன்னும் இருக்கு. அதை செய்யணும் என கூறிய நடிகர் ரஜினிகாந்த் தமிழருவி மணியனை கட்சியை மேற்பார்வையாளராகவும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அர்ஜுன் கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்தார்.