தமிழகத்தில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அடிப்படையை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வருகிறது.
தற்போது அடுத்த கட்ட ஊரடங்கு மற்றும் தலைவர்கள் குறித்து முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் பலகட்ட தளர்வுகள் உடன் பொது ஊடகம் நீட்டிக்கப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
- அதன்படி டிசம்பர் 16 முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- டிசம்பர் 7 முதல் அனைத்து கல்லூரிகளும் இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்.
- வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
- அதேபோல் அரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சம் 200 பேர் கொண்ட பொழுது போக்கு, அரசியல், வழிபாடு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.