Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் சூர்யா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று கதையில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சூர்யா அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். அதற்கென பிட்னஸ் பயிற்சி எடுத்துவரும் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |