மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கவும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இதையடுத்து மாநில அரசு சார்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5,00,000 ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.