Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில்…. திடீரென ஏற்பட்ட தீ… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்காரு நாயுடு. இவரது பிளாட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் பங்காரு நாயுடு உள்ளிட்ட 4 பேரும் உடல் கருகிய நிலையில் இறந்தனர். இதையடுத்து அவரது சடலங்கள் மீட்கப்பட்ட பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .எப்படி தீ விபத்து ஏற்பட்டது  என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு நாயுடு பஹ்ரைனில் இருந்து வந்து விசாகப்பட்டினத்தில் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |