Categories
தேசிய செய்திகள்

அடி மேல அடி வாங்கும் சீனா….. வச்சு செய்யும் இந்தியா… தெறிக்க விட்ட மத்திய அரசு …!!

59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 47 செயலிகள் தடை செய்ய இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக சென்ற மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகள் ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலியாக உள்ள  47 சீன செயலிகளை இந்தியா மீண்டும் தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட குளோன் செயலிகளில் டிக் டோக் லைட் மற்றும் கேம் ஸ்கேனர் அட்வான்ஸ் போன்றவை அடங்கும்.

இந்த ‘குளோன்’ செயலிகளை தடை செய்வதற்கான உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்கனவே பல விதிகளை கடுமையாக்கியுள்ள நேரத்தில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. மேலும், 275 சீன செயலிகள் நீக்குவதற்கு பட்டியலிடப்பட்டதாகவும், இந்த செயலிகளின்  பாதுகாப்பு அம்சங்கள் பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில்:- “இந்த செயலிகள்  இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிராக செயலிகள் ஈடுபட்டுள்ளன. “இதுபோன்ற கவலைகள் நம் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்பது சமீபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் சில மொபைல் செயலிகளை தவறாக பயன்படுத்துவது பற்றி பல அறிக்கைகள் உள்பட பல்வேறு புகார்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வந்துள்ளது. இவைகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பிடங்களைக் கொண்ட சேவையகங்களுக்கு பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் திருடி மறைத்து அனுப்புகிறது” என்று அந்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |