Categories
உலக செய்திகள்

அடி தூள்…! லெஃப்ட் ரைட் எடுத்த “சின்னஞ்சிறு தமிழன்”….. சென்னைக்கு கிடைத்த பெருமை…. வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்….!!

சென்னையை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் மிக உயரிய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதை தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்த்துக்களை அச்சிறுவனுக்கு தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் vergani ஓபன் செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த 14 வயதாகும் பரத் சுப்பிரமணியம் என்பவர் கலந்து கொண்டுள்ளார். அவ்வாறு கலந்துகொண்ட பரத் vergani ஓபன் செஸ் போட்டிகளில் மொத்தமாகவுள்ள 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளை வென்றுள்ளார்.

மேலும் இவர் மிக உயரிய விருதான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்வதற்கு தேவையான 3 கட்ட இலக்குகளை பூர்த்தி செய்ததோடு மட்டுமின்றி போட்டிகளில் 2,500 எலோ புள்ளிகளையும் அச்சிறுவன் எடுத்துள்ளார்.

ஆகையினால் 14 வயதுடைய பரத் செஸ் போட்டியில் 73 ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு இந்தியாவில் முதன்முதலாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |