சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தான, பகத் பாஸில் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. கடந்த வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் தான் கடந்த வருடம் வெளியாகி உள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கூட இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. மேலும் தமிழிலும் 25 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ள காரணத்தினால் கதையில் சில மாற்றங்களை செய்து எழுதியதாக கூறப்பட்டது.
தற்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் வேலைகள் முழு மூச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் பிரபலங்களின் போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர், டிசைனர் மற்றும் மொத்த குழுவினரும் சிறப்பானவற்றை கொடுக்க தங்கள் முயற்சிகளில் இருக்கின்றார்கள் என படத்தின் போட்டோ சூட் நடப்பது பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.