Categories
சினிமா

அடி தூள்….! “நடிகர் வடிவேலுவின் காதல் நகைச்சுவை படம்”…. இயக்கும் பிரபல இயக்குனர்….!!!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் வடிவேலுவை வைத்து காதல் நகைச்சுவை படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வலம் வருபவர். மேலும் தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் நடிக்க மறுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களில் நடிக்க தடை விதித்தது. இப்பிரச்சினையின் காரணமாக கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த பிரச்சனையானது சமீபத்தில் தீர்க்கப்பட்டு தடையும் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வடிவேல் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் வடிவேல் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இவர்  வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாகவும், அது ஒரு காதல் நகைச்சுவை படமாக இருக்கும் எனவும் அந்த கதாபாத்திரத்திற்கு வடிவேலுதான் சிறப்பான நபர் என்றும் கவுதம் மேனன் செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Categories

Tech |