தமிழக அமைச்சரவையில் உள்ள திட்ட குழு தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை முழுமையாக தன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என முதல்வர் மு. க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் தலைமையின்கீழ் திட்ட குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளார், மற்றும் இந்த குழுவில் சில உறுப்பினர்களும் உள்ளனர். இந்த திட்ட குழுவில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கொள்கை குழுவை சார்ந்தே நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகள் கூறுகிறீர்கள். இது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல் முழு செயல் வடிவமாக கிடைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். உங்களுக்கு புதிய எண்ணங்கள் தோன்றலாம். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளும் எவ்வாறு நடக்கின்றன என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தி அந்த ஆய்வின் மூலம் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறலாம். நீங்கள் ஆலோசனை சொல்லும் போது ஏ டு இஸட் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
தமிழகம் பல்வேறு வகைகளிலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இது நமக்கு ஒரு பெருமையான விஷயம் ஆகும். தமிழகம் முன்னேறி கொண்டே செல்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. மேலும் தமிழகம் இந்தியாவில் சிறந்த மாநிலமாக விளங்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது. இதற்காக நீங்கள் நேரடியாக சென்று விவசாயிகளிடமும், தொழில் நடைபெறும் தொழிற்சாலைகளுக்கும், அல்லது சிறுதொழில் கூடங்களுக்கு, சென்று நேரில் ஆய்வு செய்து உங்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை கூறலாம். மனிதவள மேம்பாடு, கல்வி, வறுமை ஒழிப்பு, குழந்தை திருமணம் தடை, பெண் குழந்தைகளின் வளர்ச்சி,சட்டம் ஒழுங்கு அனைத்திற்கும் உங்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை சீரான சமூக மாற்றம் கொண்டுவர முடியாது ஏனெனில் ஒரு மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்,
அது ஒரு மாவட்டத்தில் அதிகமாக இருக்கலாம் கல்வியின் தரத்தை பொருத்து மாறுபடுகிறது என்று கூறிவிட முடியாது. கல்வி என்பது அனைவருக்கும் தற்போது எளிதாக கிடைத்து வருகிறது. ஆனால் சூழ்நிலைகள் மற்றும் வைரஸ் பரவல் காரணமாக தற்போது கல்வியில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை கூறலாம் இதில் எந்த தவறும் இல்லை. திராவிட மாடல் என்பது சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் பண்பாடு, என்று அனைத்தையும் வளர்க்கும் ஒரு ஆக்கபூர்வமான விஷயம் இதனை மேலும் முன்னேற்ற உங்களது வழிகாட்டல் தேவை” எனக் கூறினார்.