Categories
பல்சுவை

அடிப்பிடித்த, தீய்ந்த பாத்திரங்கள் புதுசு போல பளபளக்கணுமா?…. இதோ சூப்பரான டிப்ஸ்…. ட்ரை பண்ணி பாருங்க….!!!!

சமையலறையில் சிலநேரம் கவனக் குறைவாக இருக்கும்போது பாத்திரங்கள் தீய்ந்துவிடும். அப்படி தீய்ந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனை எளிய முறையில் செய்து முடிக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொக்கோ கோலா மற்றும் பெப்சி போன்ற பானங்கள் தாகத்தை தனித்து மட்டுமல்லாமல் தீய்ந்த திட்டுகளை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது. இந்த பானத்தை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்தவுடன் நிறுத்திவிட்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி கீழே வைத்து ஒரு பிளாஸ்டிக் பிரஸ் அல்லது டிஷ் சோப்பு வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். தற்போது பாத்திரத்தில் உள்ள கரைகள் எளிதாக மறைந்துவிடும்.

மேலும் இப்படிப்பட்ட பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு உப்பு மற்றும் சமையல் சோடா சிறந்தது. உப்பு அல்லது சமையல் சோடாவை நீங்கள் பயன்படுத்தக்கூடிய டிஷ்சோப்பில் சேர்த்து வழக்கம்போல பாத்திரத்தை நன்றாக தேய்த்து எடுத்தால் அப்படியே மறைந்து விடும்.

அதனைப் போலவே தீய்ந்து போன பாத்திரத்தில் உள்ள திட்டுக்களை நீக்குவதற்கு பேக்கிங் சோடா சிறந்தது. பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பாத்திரத்தில் நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு பாத்திரத்தை கழுவினால் பளபளப்பாக இருக்கும்.

தீய்ந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் வினிகரை சேர்க்க வேண்டும். இரவு முழுவதும் அதனை நன்றாக ஊற வைத்துவிட்டு அடுத்த நாள் பாத்திரத்தை வழக்கம் போல சோப்பு போட்டு தேய்த்து கழுவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

வெங்காயம் பாத்திரங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தபடுகிறது. கரை படிந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் வெங்காயத்தின் தோலை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வழக்கம்போல சோப்பு சேர்த்து சுத்தம் செய்தால் கறை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

மேலும் கரைபடிந்த பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை இதனை கொதிக்க வைத்து லேசாக ஆறியவுடன் தேய்த்து எடுத்தால் கரை மறைந்து விடும்.

இதனைப் போலவே எலுமிச்சைச்சாறு பாத்திரங்களில் உள்ள கறைகளை எளிதில் சரிசெய்ய உதவுகின்றது. பாத்திரத்தில் எலுமிச்சைச் சாற்றை தடவி சிறிது நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு வழக்கம்போல கல்வி எடுத்தால் கறை நீங்கிவிடும்.

Categories

Tech |