செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. திமுக ஆட்சி வந்த உடனே நீட் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தின் திமுக அரசு சட்ட மன்றத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசு இன்னும் அனுப்பப்படவில்லை.
நீட் தேர்வு திணிக்கப்பட்டதால் அரியலூர் அனிதா உட்பட்ட 16 மாணவர்கள் உயிரை போக்கிக் கொண்டனர். .ஒன்றிய பாஜக அரசின் அலட்சியமே 16 மாணவர்களின் உயிர் போனதற்கு காரணமாக உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும், ஏழு தமிழர்கள் விடுதலையில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்த பிறகும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல, நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டங்கள் 3 திரும்பகோரி ஓர் ஆண்டு காலம் டெல்லியில் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் அறவழியில் போராடி போராடினார்.
200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தார்கள். ஒன்றிய பாஜக அரசு அடக்குமுறையை ஏவிய போதும் அஞ்சாமல் போராடிய விவசாயிகள் வெற்றி கிடைக்கும் வரை போர்க்களத்தில் நிற்போம் என்று தீரமுடன் அறிவித்தனர். இறுதியில் விவசாயிகளின் எழுச்சி பாஜக அரசை பணிய செய்தது. 3 வேளாண்மை சட்டம் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளின் அறப்போர் வெற்றி கண்டது.