Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடிபட்டவுடன் அஜித் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா…? அதிர்ச்சியுற்ற படக்குழுவினர்…!!!!

வலிமை திரைப்படத்தின்போது அஜித் அடிபட்டவுடன் கூறியதை கேட்ட படக்குழுவினர் அதிர்ந்து போனார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் நடிப்பில் பிப்ரவரி 24ம் தேதி வலிமை  திரைப்படம் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜீத்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷு நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டரை ஆண்டுகளாக நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சியின்போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இதை அறிந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படக்குழுவினர் டூப்போட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.ஆனால் அஜித் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என நடித்தார். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் போது விபத்துக்குள்ளானார். அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது படக்குழுவினர் இதற்குத்தான் நாங்கள் டூப்பை பயன்படுத்தலாம் என்று கூறினோம் என்று சொன்னார்கள். அதற்கு அவர்களும் மனிதர்கள் தானே. அப்ப அவர்களுக்கு அடிபட்டால் பரவாயில்லையா? என்று கேட்டுள்ளார். இதை கேட்ட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அஜித் மற்ற கலைஞர்கள் மீது அக்கறையுடன் இருப்பதை கண்டு அனைவரும் அசந்து போனார்கள்.

Categories

Tech |