Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு…. வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!

 புலம்பெயர்ந்து நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1452 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுதுணை திட்டங்கள் உள்ளடக்கிய இந்த திட்டமானது நடப்பு 2021-2022 ஆண்டில் இருந்து வருகிறது.

2025-2026 ஆண்டு வரை நீடிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர்  ஒரு நியாயமான வருமானம் ஈட்டவும், பொது  பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக் கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உதவிகள் வழங்கப்படும். திரிபுரா மாநிலத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் போது அகதிகளுக்கு பயங்கரவாத வன்முறை செயல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேற்குவங்காளத்தில் முன்பு வங்காளதேச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் மேம்பாட்டிற்கும் அந்நாட்டில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து திரும்பி அவர்களின் மறு குடியிருப்பு பணிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |