Categories
உலக செய்திகள்

அடிக்கடி வெளியே போன மனைவி…! கேட்டால் தற்கொலை மிரட்டல்…. இந்திய பெண் செயலால் கணவன் அதிர்ச்சி…!!

இங்கிலாந்தில் இரண்டாவதாக கள்ளத் திருமணம் செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் தம்பதியரான இந்திய வம்சாவழியை சேர்ந்த பிருந்தா மற்றும் ரவி மேனன் என்ற இருவரும் இருந்துள்ளார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் லண்டனிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பிருந்தா திடீரென்று அடிக்கடி வெளியே தங்கியும், நீண்ட நாட்களுக்கு வீட்டிற்கு வராமலும் இருந்தார். இதனை கணவர் தட்டி கேட்டால், தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார்.

அதன்பின் ரவிக்கு தன்னுடைய மனைவி குறித்த உண்மை தெரியவந்தது. அதாவது பிருந்தா அதே பகுதியிலிருக்கும் மேத்யூ ஹால் என்ற வாலிபரை திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் குழந்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னுடைய கணவருக்கு துரோகம் செய்து மற்றொரு திருமணம் முடித்ததால் அவருக்கு ஏழு ஆண்டு காலம் சிறைத்தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |