Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி விடுமுறை எடுப்பதால் பாதிப்பு…. தலைமை ஆசிரியரை கண்டித்து…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்….!!

தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 84 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கேட்டபோது, பள்ளியின் தலைமையாசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

மேலும் தலைமையாசிரியரிடம் மாணவர்கள் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களில் கையொப்பம் பெறுவதற்கு பல முறை அலைய வேண்டிய நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |