Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… “விஷம் குடித்த நர்ஸ் மற்றும் மகள் மரணம்”…. சோக சம்பவம்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து நர்ஸ், அவருடைய மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சந்திப்பில் சி.என். கிராமத்தில் வசித்து வருபவர் காற்றாலை இன்ஜினியர் மாடசாமி. இவருடைய மனைவி சுமதி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சுமதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது சுமதி மற்றும் இளைய மகள் சுப ராஜேஸ்வரி(8) ஆகிய 2 பேரும் விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாடசாமி தனது மனைவி, மகளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுமி சுபராஜேசுவரி இறந்தாள். நேற்று அதிகாலை சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதால் மனம் வேதனை அடைந்த சுமதி இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் மூத்த மகள் விஷம் குடிக்காமல் வெளியே ஓடிவிட்டாள்.

இதையடுத்து சுமதி, இளையமகள் சுபராஜேசுவரிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து சுமதியின் கணவர் மாடசாமி மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |