குடும்பத்தகராறால் மானமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஓவியம் பாளையம் பகுதியில் பழனி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த பழனி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து பழனி மயங்கி இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.