சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக கிரைண்டர் , மிக்ஸி, இன்வெர்டர் ஆகியவை பழுதாகின்றன. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் மின்வெட்டு பிரச்சனை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்திலும் மின்வெட்டு பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.