Categories
மாநில செய்திகள்

அடாவடியாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன…?

எளிய மக்களின் இன்றியமையாத பயண வாகனமாக பேருந்துகள் திகழ்ந்து வருகின்றது. அந்த பேருந்து கட்டணம் நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தால் மக்களின் நிலை என்னவாகும்? இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் 11 லட்சத்து நாலாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68,800 அவர்களிடமே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்திருக்கின்றார். மேலும் ஆம்னி பேருந்துகளில் விழா காலங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் விதமாக சட்டபூர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கின்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான போக்குவரத்து துறை ஆணையர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறைகள் இருந்ததை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்திருக்கின்றது. இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை ஆணையர் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு 953 பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68,800 திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் நேற்று மாலை முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து கூடுதலாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிக கட்டணம் வசூலித்து உரிமம் இல்லாத 4 ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சத்து 4000 அபராதம் மிதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆன்மி பெயர்களில் கட்டணம் உயர்வை தடுக்கும் விதமாக போக்குவரத்து ஆணையரிடம்  ஆய்வு கூடங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கலந்து பேசி ஆம்னி   பேருந்துகளில் கட்டணம் உயர்வை தடுக்கும் விதமாக சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆட்டோவிற்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் விரைவில்  அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனை அடுத்து தீபாவளி பொங்கல் விழாக்களில் கூடுதல் அரசு பேருந்துகள் விடப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 500 பேருந்துகள் வாங்க திட்டமிட்டு இருக்கின்ற நிலையில் முதற்கட்டமாக 100 மின்னணு பேருந்துகளை வாங்குவதற்கான டென்டர்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |