படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷை கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் திசைமாற்றியுள்ளனர்.
தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் போல் நடிக்க விரும்பவில்லை. தனுஷ் ஷெஃப்பாக ஆசைப்பட்டார். ஆனால் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி நடிகராகி விட்டனர்.
கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் இருவரும் கட்டாயப்படுத்தாமல் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இத்திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் அண்ணன் செல்வராகவனும் இப்படத்தில் நடிக்கிறார் குறிப்பிடத்தக்கது.