Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. எப்படி கொலை பண்ணனும்?…. கூகுளில் தேடிய பெண்….. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

கேரளாவை உலுக்கி இருக்கும் ஷரோன்ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஷரோன்ராஜை தான் கொலை செய்யவில்லை என கிரீஷ்மா விசாரணையின் போது கூறியதாகவும், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது செல்லிடப்பேசியில் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதை ஆதாரமாகக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொலை செய்தால் எத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை என்பதையும் முன்கூட்டியே கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும் கூறப்படுகிறது.

வேறு நபருடன் திருமணம் உறுதிசெய்யப்பட்ட சூழ்நிலையில், காதலனை வீட்டிற்கு வரவழைத்து ஆயுர்வேதம் மருந்து எனக்கூறி கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்துக் கொலை செய்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஷரோன்ராஜை விஷம் வைத்துக் கொலைசெய்ய உதவியதாகவும், தடயங்களை அழித்ததாகவும், கிரீஷ்மாவின் தாய் மற்றும் உறவினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஷரோன்ராஜூக்கு கலந்துகொடுக்கப்பட்ட விஷ பாட்டிலை வீட்டின் அருகில் உள்ள வனப் பகுதிக்குக் கொண்டுச்சென்று வீசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

கேரளா பாறசாலைப் பகுதியில் வசித்து வந்த 23 வயதான கல்லூரிமாணவர், தன்னுடைய காதலி கசாயம் என்று சொல்லிக் கொடுத்த திரவத்தினை குடித்த நிலையில், உடல்உறுப்புகள் செயலிழந்து இறந்தார். அதன்பின் தன் மகனின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். அதனை தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், ஷரோன்ராஜ் என்ற இளைஞர் அக்டோபர் 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தன் காதலி வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார். அப்போது வீட்டுக்குச்சென்ற ஷரோனுக்கு அவரது காதலி கசாயம் எனக்கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதனைக் குடித்த ஷரோன் தொடர்ந்து வாந்தி எடுத்திருக்கிறார். பின் திருவனந்தபுரத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்து 11 நாட்களில் மரணமடைந்தார்.

மருத்துவப்பரிசோதனையில் அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், அவரது உடல்உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவலளித்தது. இதனால் போலீசார் வழக்குப்பதிந்து கல்லூரி மாணவி கிரீஷ்மாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தான் காதலித்த ஷரோனிடமிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக, ஆயுர்வேத மருந்து என்று கூறி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக்கொடுத்ததை ஒப்புக்கொண்டார். சென்ற ஓராண்டுக்கும் மேல் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால் ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தான் ஷரோனையே திருமணம் செய்வதாக கிரீஷ்மா சமாதானம் செய்துள்ளார். தன் ஜாதகப்படி தான் முதலில் திருமணம் செய்துகொள்ளும் நபர்  இறந்துவிடுவார் எனவும் இதனால் முதலில் ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்டு பின் அவர் இறந்ததும் ஷரோனை திருமணம் செய்துகொள்வதாக கிரீஷ்மா கூறியுள்ளார். அதற்கு ஷரோன் ஒப்புக்கொள்ளவில்லை. இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ராணுவ வீரரிடம்  காட்டி திருமணத்தை நிறுத்துவேன் என ஷரோன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இரண்டு பேரும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஷரோன் தீவிரமாக இருந்ததால், அவரைக் கொலைசெய்வது என கிரீஷ்மா முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி வீட்டுக்கு வரவழைத்து, ஆயுர்வேத மருந்து எனக்கூறி பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்துடன் கலந்து கொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றில் விநோதம் என்னவெனில் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் நிலையிலும் கிரீஷ்மா கலந்துகொடுத்த ஆயுர்வேத மருந்தைக் குடித்த பிறகு தான் தனக்கு இப்படி ஆனது என பெற்றோரிடமோ,  மருத்துவர்களிடமோ, காவல்துறையிடமோ ஷரோன் கூறவில்லை என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். தனது இறுதிக்கட்ட வாக்குமூலத்தில்கூட, காவல்துறையிடம் கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே ஷரோன் கூறியுள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உடல்உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கிரீஷ்மா, சுத்திகரிப்பானைக் குடித்து தற்கொலைக்கு முயன்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கு அவரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |