Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! 100கிலோ தங்கமா ? சிபிஐயிடமே திருட்டு… பரபரப்பு விசாரணை …!!

சிபிஐ வசம் இருந்த 100 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு, சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தற்போது 103 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே, சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை சுரானா நிறுவனம், பல்வேறு வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றிருந்த நிலையில், அந்த வங்கிகள் மூலமாக நகைகள் கைப்பற்றப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில், சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையை முறைப்படி இன்று துவக்கியுள்ளது. இந்த விசாரணையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்‍கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |