Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! பொம்மையையும் விட்டு வைக்கலையா ? பார்சலை பிரிந்து ஆடிப்போன பெற்றோர் …!!

அமெரிக்காவில் குழந்தைக்கு சர்ப்ரைஸாக பரிசு வாங்கிய பொம்மையில் போதை மாத்திரைகள் இருந்ததை  கண்டு அதிர்ந்து போனா பெற்றோர் .

அமெரிக்காவின்  அரிசோனா பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு பரிசாக பொம்மை ஒன்று ஏற்கனவே பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளனர். அந்த பொம்மையை தன் குழந்தையிடம் கொடுப்பதற்கும் முன் அது ஏற்கனவே பயன்படுத்திய பொம்மை என்பதால் அந்த குழந்தையை தாய் சுத்தப்படுத்த நினைத்தார். அப்படி அவர் சுத்தம் செய்யும் போது அந்த பொம்மைக்குள் இரண்டு பிளாஸ்டிக் கவர் பார்சல் இருந்துள்ளது.

 

அதை பார்த்தவுடன் தாய் அதிர்ந்து போய் விட்டார். உடனே தன் கணவரை அழைத்து அவரிடம் காட்ட அதில் இருந்தது 5000 போதை மாத்திரைகள் இருப்பதை அதிர்ந்த உடனே போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து அந்த போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள். மேலும் இதுகுறித்து பெற்றோர்களுக்கு தைரியமாக புகார் செய்ததால் பாராட்டும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து குழந்தையின் தாய் ,இந்த மாத்திரைகள் குழந்தையின் கையில் கிடைத்திருந்தால் என்னவாகி  இருக்கும்,  நினைக்கவே மனசு நடுங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தெரிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் முதலில் பயந்து போனார்கள் பிறகு பெற்றோர்கள் இது பற்றி போலீசில் புகார் அளித்தவுடன் நிம்மதி அடைந்தார்கள்.

Categories

Tech |