Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடப்பாவிகளா…! சென்னையில் 5மடங்கு அதிகமா ? அதிகளவில் குவிந்த ஆணுறை ..!!

இந்த 2020ம் ஆண்டில் ஊரடங்கு காலத்தில் அதிகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டவை தொடர்பான பட்டியலை ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான டான்ஸோ வெளியிட்டுள்ளது.

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் 2020ஆம் ஆண்டின் பெரும்பகுதி கொரோனா பொது முடக்க நாட்களாகவே பலருக்கும் கழிந்து விட்டது.  இந்நிலையில், 2020இல் இந்தியாவில் ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பருக்கான ஆர்டர் ஆன்லைனில் அதிகளவில் குவிந்ததாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக அதிகம் ஆர்டர் செய்து டெலிவரி டிரெண்டிங்கில் இடம்பெற்றதை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனமான DUNZO அப்ளிகேஷன் மூலம் ஆர்டரை செய்தவற்றை அடிப்படையாக கொண்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆணுறையை பொறுத்தவரை இரவு நேரத்தை காட்டிலும் பகல் நேரத்தில் அதிகளவில் ஆர்டர் வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஹைதராபாத், சென்னை, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் பெங்களூரு மாதிரியான நகரங்களில் வழக்கத்தை காட்டிலும் ஆணுறையை அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு கூடுதலாக ஆணுறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.  புகையிலையை மடிக்க பயன்படும் ரோலிங் பேப்பர் பயன்பாடும் இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. சென்னையில் வழக்கத்தை விட 22 மடங்கு அதிகமான ஆர்டர் குவிந்துள்ளது.

இவற்றை தவிர பெங்களூரு வெங்காயத்தை அதிகம் ஆர்டர் செய்ததாகவும், புனே மற்றும் ஹைதராபாத் பால் ஆர்டர் செய்ததாகவும், சென்னை உருளைக்கிழங்கை ஆர்டர் செய்ததாகவும், டெல்லி குளிர்பானங்களை ஆர்டர் செய்ததாகவும் டான்ஸோ தெரிவித்துள்ளது.

Categories

Tech |