பீகார் மாநிலமான பூர்னியா மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் அடிக்கடிமின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வெட்டு தொடர்பாக அக்கம் பக்கம் கிராமங்களில் விசாரித்துள்னர். அப்போது அங்கெல்லாம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் மின்வெட்டு பற்றி கிராம மக்கள் அளித்த புகாருக்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுமே தவிர்த்து அடிக்கடி மின்சாரம் நிறுத்துவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் எப்படி தங்களது கிராமத்தில் மட்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது? இதற்கான காரணத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அவ்வாறு அவர்கள் தீர்மானித்த சிலமணி நேரத்திலேயே மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு பள்ளியில் எல்க்ட்ரிசீயன் ஒருவர் தன் காதலியை தனிமையில் சந்தித்துள்ளார். இதற்கிடையில் அவர்களை இருவரையும் கையும் களவுமாக பிடித்த கிராமமக்கள், இருட்டில் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டுள்ளனர்.
அதற்கு, காதலியை தான் அவ்வபோது இப்படி சந்திப்பது வழக்கம் தான் என்றும் எப்போது எல்லாம் தனக்கு காதலியை சந்திக்கவேண்டும் என தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கிராமம் முழுதும் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அவரை தனிமையில் சந்திப்பேன் என்றும் அந்த எலக்ட்ரீசியன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை ஊர்வலமாக அழைத்து சென்று தர்மஅடி கொடுத்தனர். இருப்பினும் எவக்ட்ரீசியன் மேல் புகார் கொடுக்காமல் அவர் காதலித்த பெண்ணையே அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர்.