அமெரிக்காவில் பள்ளிக்கூடத்திற்கு அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு கடந்த 2 மாணவர்களுள் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அமெரிக்காவிலுள்ள மின்னசோட்டா மாநிலத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது அம்மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றிற்கு அருகே 2 மாணவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கப்பட்டு கிடந்துள்ளார்கள்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் 2 மாணவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால் பரிதாபமாக அவர்களில் ஒரு மாணவர் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.