பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு தலிபான்கள் மீண்டும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் நேற்று இரவு முழுவதுமாக வெளியேறியது. காபூல் விமான நிலையம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படைகள் அந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு முழுவதுமாக புறப்பட்டு, தங்கள் சொந்த நாட்டுக்கு சென்றனர். இதைதொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தலிபான்கள் அமெரிக்கப் படையினர் விட்டுச்சென்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன பிளாக்ஹாக் என்ற ஹெலிகாப்டரை அவர்கள் இயக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் அமெரிக்கா ஹெலிகாப்டரை தலிபான்கள் இயக்குவது போன்றும், அதில் ஒரு மனிதனின் உடல் கட்டி தொங்கவிடப்பட்டது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அது உண்மையில் மனிதனா? அல்லது பொம்மையா? என்பது குறித்து விரிவான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் காவல் விமானநிலையத்தை ஆக்கிரமிப்பு செய்த தலிபான்கள் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பெண் செய்தி தொடர்பாளர் ஒருவரை தடுத்து நிறுத்தம் செய்த வீடியோக்கள் வெளியாகியது. ஆப்கானிஸ்தானின் மக்களின் உரிமை குறித்து கவலைப்படும் நேரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தது போன்ற சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.