ரூசோ சகோதரர்கள் இயக்கும் ஹாலிவுட் திரைப்படமான தி கிரேட் மேனின் முதல் க்ளிலிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அதில் நடிக்கும் தனுஷின் காட்சிகள் இடம்பெறாது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தி கிரேட் மேன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில் ரூசோ சகோதரர்கள் ஹாலிவுட் படமொன்றை இயக்குகிறார்கள். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் கர்ணன் படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே வெளி நாட்டிற்கு சென்றுள்ளார். இவருக்கு தி கிரே மேன் ஹாலிவுட்டில் 2 ஆவது படமாக திகழ்கிறது.
இந்நிலையில் “தி கிரே மேன்” படத்தின் முதல் க்ளிலிம்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே உலகளவில் ட்ரெண்டான நிலையில் அதில் நடிகர் தனுஷின் காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை. இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் அவர் நடித்த காட்சிகள் இடம்பெறும் வீடியோவை வெளியிடும்படி ட்வீட் செய்துள்ளார்கள்.