இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்கள் பரந்து விரிந்துள்ள காஷ்மீரின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இதனால் மூணாரின் தூய்மை மற்றும் அதன் அழகிற்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் அந்த கிராம மக்கள் அனுமதிப்பது இல்லை. கிளீன் சிட்டி கிரீன் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் மூணரை பாதுகாத்து வருகின்றனர் கிராமத்தினர்.
இந்நிலையில் மூணாறு பகுதியில் உள்ள முதிராபுலா ஆற்றில் சிறுநீர் கழித்த இளைஞருக்கு 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மூணாறு பகுதியில் கழிப்பிடத்தை தவிர மற்ற எந்த இடங்களிலும் இயற்கை உபாதைகளை கழிக்க கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் இதனை மீறி அந்த இளைஞர் ஆற்றில் சிறுநீர் கழித்ததால் அவருக்கு 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக பஞ்சாயத்து அலுவலர்கள் கூறுகின்றனர்.