விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படத்தை பார்த்த பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றார்கள். தற்பொழுது இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையே தொடர்ந்தால் படத்தை விரைவில் தியேட்டரில் இருந்து எடுத்து விடுவார்கள் என சொல்லப்படுகின்றது.
இத்திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 45 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கின்றதாம். மேலும் பெரும்பாலான தியேட்டரில் படத்தை தூக்கி விட்டார்கள். இது விக்ரம் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நம்பி தான் விக்ரம் இருக்கின்றார். இத்திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.