கேரளாவில் புதிய வைரஸ் தாக்கியதில் அடுத்தடுத்து இரண்டு குட்டி யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டூர் என்ற பகுதியின் அருகே வனப்பகுதியில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தற்போது அங்குள்ள யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயது குட்டி யானை ஒன்று திடீரென்று இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்தது.
இதையடுத்து அந்த முகாமில் உள்ள அனைத்து யானைகளும் பரிசோதனை செய்யப்பட்டதில் 3 யானைகளுக்கு இந்த ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த யானை குட்டிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் நேற்று காலை வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த ஆறு வயதான அர்ஜுன் என்ற யானை உயிரிழந்தது. கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு குட்டிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.