Categories
சினிமா

அடப்பாவமே….! “கமலோட நடிச்சு மார்க்கெட்டை இழந்த நடிகர்கள்”…. யார் யாருனு நீங்களே பாருங்க….!!!

வளர்ந்து வரும் நடிகர்கள் சினிமாவில் டாப் ஸ்டேஜில் இருக்கும் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது அவர்களுடைய சினிமா கேரியர் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு பல நடிகர்கள் சினிமாவின் உச்சம் தொட்ட வரலாறு உண்டு. அதேபோல் சில நடிகர்கள் சறுக்கி விழுந்த வரலாறும் உண்டு. அந்த வரிசையில் கமலுடன் ஜோடி போட்ட இரண்டு நடிகர்கள் மொத்தமாக சினிமா வாய்ப்பை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ்சினிமாவின் உச்சிக்கு சென்றவர் மாதவன். இவர் நடித்த மின்னலே, அலைபாயுதே படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதனைதொடர்ந்து மாதவன் கமலுடன் சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார். என்னதான் இந்த படம் வெற்றி பெற்றாலும் மாதவனின் நிலைமை என்னவோ தலைகீழாக மாறிவிட்டது. அதற்குப் பிறகு மாதவனுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வராமல் சினிமாவில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

அதேபோல் நடன இயக்குனர் பிரபுதேவா மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் காதலா காதலா படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு அவரின் சினிமா வாய்ப்பும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல் ராஜமௌலி இயக்கத்தில் பம்மல் கே சம்பந்தம் என்ற படத்தில் அப்பாஸ் இணைந்து நடித்திருந்தார். அதுவரை முன்னணி கதாநாயகனாக தமிழக பெண்களின் மனதை கவர்ந்து வந்த அப்பாஸ் அந்த படத்திற்கு பிறகு சுத்தமாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்போது முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் நடிகர் அப்பாஸ்.

Categories

Tech |