Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… உண்ணமுடியாமல் தவித்த மாடு… பரிசோதனையில் தெரியவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மாடு ஒன்றின் வயிற்றில் இருந்து 21 கிலோ நெகிழிப் பைகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதன் காரணமாக தெருவில் திரியும் விலங்குகள் உணவு எதுவும் இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை உண்டு வருகின்றன. தெரு நாய்கள், குதிரைகள், மாடுகள், எருதுகள் போன்றவை உணவுக்கு வழியில்லாமல் தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் பெரும் பிரச்சனைகளுக்கு வழங்கிவருகின்றன.

அதுபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூர் என்ற பகுதியில் மாடு ஒன்று உணவு உண்ண முடியாமல் தவிப்பதை பார்த்த, அந்த பகுதியை சேர்ந்த விவசாயி அந்த மாட்டை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மார்பை பரிசோதனை செய்து பார்த்தபோது அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின்பு அந்த மாட்டின் வயிற்றில் இருந்து 21 கிலோ நெகிழிப் பைகள் அகற்றப்பட்டன. இதுபோன்ற நெகிழிப் பைகளை விலங்குகள் தொடர்ந்து உண்பதால் உயிரிழப்புகள் அதிகம் நேரிடுவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |