வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு விருப்பமான சேமிப்பு திட்டம். ஒவ்வொரு வருடமும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசு எவ்வளவு வட்டி நிர்ணயம் செய்கின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். EPFகணக்கில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதத்தையும், முதலாளிகள் அதற்கு சமமான தொகையையும் பங்களிப்பு செய்வதால் மாதாந்திர சேமிப்பை இரட்டிபாகிறது. இதில் வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி எதுவும் கிடையாது.
ஆனால் அரசு pf பணத்திற்கு தற்போது 8.1 சதவீதம் வட்டியை நிர்ணயம் செய்துள்ளது.அதாவது உங்களின் தொடக்க இருப்பு ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால் அதற்கான வட்டி விகிதம் 8.1சதவீதம். ஊழியரின் மாதாந்திர பங்களிப்பு ஆயிரம் ரூபாய் எனில் அவரை அவசர தேவைக்காக மூன்றாவது மாதத்தில் 30 ஆயிரம் ரூபாய் எடுத்தால் தற்போது கிடைக்கும் வட்டியை கணக்கிடலாம்.
உங்கள் மொத்த இருப்புத் தொகை= ரூ. 8,87,000 மற்றும் வட்டி 8.1 எனில் = ரூ. 8,87,000 x (8.1/1,200) = ரூ. 5,987. நாம் முன் பார்த்த தொடக்க இருப்பு ரூ 1,00,000 உடன் ஒரு வருட ஊழியர் பங்களிப்புத் தொகையை கூட்டிக் கொள்ள (+) (ரூ.12000) வேண்டும். அதனுடன் அவர் எடுத்துக் கொண்ட பணத்தை(ரூ.30,000) கழிக்க வேண்டும்.பின்பு அதனுடன் மொத்தமாக அந்த ஆண்டிற்குக் கிடைத்த வட்டித் தொகையை (ரூ.5,987) கூட்டினால் உங்களின் பிஎஃப் பணத்திற்கான வட்டியுடன் கூடிய தொகையைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டின் இறுதி இருப்பு: தொடக்க இருப்பு (Opening balance) + பங்களிப்புகள் (contributions) – திரும்பப் பெறுதல் (withdrawal) + வட்டி = ரூ. 1,00,000 + ரூ. 12,000 – ரூ. 30,000 + ரூ. 5,987 = ரூ. 76,013 கையில் கிடைக்கும்.