216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் .
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ராமானுஜரின் சிலை இரவு நேரங்களில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும் 1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆசிரமத்திற்கு தற்போது தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, கேரளா மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வேத பண்டிதர்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் இங்கு தொண்டு செய்ய வந்துள்ளனர்.
இங்கு 7 ம் தேதி அன்று பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், 8 ம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 13ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் வருகை தர உள்ளனர்.இங்கு 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தவிர ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.