இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மக்களும் தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
அதன் பிறகு மெழுகுவர்த்தி ஏற்றி பண்டிகையை கொண்டாடிய ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். மேலும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஞ்ச் பகுதியில் இருக்கும் 10000 அடி உயரத்தில் உள்ள பனி பிரதேசத்தில் தான் ராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.